உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  மேகங்கள் தவழும் பிரான்மலைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

 மேகங்கள் தவழும் பிரான்மலைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை பகுதியில் இதமான தட்பவெப்ப நிலையில் மேகங்கள் தவழ்ந்து செல்வதால் சுற்றுலாப் பயணிகள் படையெடுக்க துவங்கியுள்ளனர். பாண்டிய நாட்டு 14 திருத்தலங்களில் ஐந்தாவது சிறப்பு பெற்றதும், பாரி ஆண்ட பறம்பு மலை என்று போற்றப்படுவதுமான பிரான்மலை அடிவாரத்தில் மூன்று நிலைகளில் சிவன் கோயில் அமைந்துள்ளது. மலை உச்சியில் விநாயகர், முருகன் கோயில்களும், தர்காவும் அமைந்துள்ளன. பிரான்மலை, அருகே உள்ள அசரீரி விழுந்தான் மலை, மேல வண்ணாரிருப்பு மலைப்பாதை இடங்களில் தற்போது இதமான தட்பவெப்ப நிலை நிலவுகிறது. வெயில், பனி, சாரல் என குளிர்வாச ஸ்தலங்களை போல் உள்ள மலை முகடுகளை மேகங்கள் தழுவிச் செல்கிறது. இதனால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர். அடிவாரக் கோயிலுக்கு ஏராளமானோர் வந்து செல்லும் நிலையில், மலை ஏற முடிந்தவர்கள் மலைஉச்சிக்குச் சென்று மேகங்களின் குளிர்ச்சியை அனுபவித்து செல்கின்றனர். மேலவண்ணா ரிருப்பு மலைப்பாதையில் இளைஞர்கள் செல்பி எடுத்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை