உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பஸ்சில் சிறுமிக்கு தொல்லை இளைஞர்கள் இருவருக்கு சிறை

பஸ்சில் சிறுமிக்கு தொல்லை இளைஞர்கள் இருவருக்கு சிறை

சிவகங்கை:சிவகங்கை அருகே பஸ்சில் சிறுமியின் துப்பட்டாவை பிடித்து இழுத்த இளைஞர்களுக்கு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிபதி உத்தரவிட்டார்.சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே தேளி கிராமத்தை சேர்ந்தவர்கள் முனீஸ்வரன் 34. விஜய் 28, மற்றும் ஒரு சிறுவன். 2015 நவ.23ல் மதுரையில் இருந்து கண்ணாயிருப்புக்கு சென்ற அரசு பஸ்சில் வந்தனர். அந்த பஸ்சில் தேளி கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவியும் வந்துள்ளார். முனீஸ்வரன் பஸ்சில் வந்த சிறுமியின் துப்பட்டாவை பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் விஜய் மற்றும் உடன் இருந்த சிறுவனும் அந்த சிறுமியை மிரட்டியுள்ளனர்.பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பூவந்தி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் முனீஸ்வரன்,விஜய், மற்றும் சிறுவன் மீது வழக்கு பதிவு செய்தனர். சிறுவன் மீது சிறார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மற்ற இரண்டு பேர் மீதும் சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.முனீஸ்வரனுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் 5 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதித்து வழக்கை நீதிபதி சரத்ராஜ் உத்தரவிட்டார்.விஜய்க்கு 3 ஆண்டு சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்பட்டது. இருவருக்கும் விதிக்கப்பட்ட அபராத தொகை ரூ.10 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும், அரசு ரூ. ஒரு லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்