உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பயன்படுத்த முடியாத சுகாதார வளாகம்; குடிமகன்கள் அட்டகாசம்

பயன்படுத்த முடியாத சுகாதார வளாகம்; குடிமகன்கள் அட்டகாசம்

காரைக்குடி : காரைக்குடி கணேசபுரத்தில் பல லட்சம் செலவில் கட்டப்பட்ட நவீன சுகாதார வளாகம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.காரைக்குடி நகராட்சி கணேசபுரம் பகுதியில் ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் நவீன சுகாதார வளாகம் கட்டப்பட்டு கடந்த ஜனவரியில் திறக்கப்பட்டது. இங்கு செயல்பட்டு வந்த, பழைய சுகாதார வளாகம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால் நகராட்சி சார்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. ஆனால் இந்த சுகாதார வளாகத்தை பெண்கள் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. அருகில் மதுக்கடை உள்ளதால் குடிமகன்கள் கடை திறந்தது முதல் இரவு வரை சுகாதார வளாகத்தை சுற்றிலும் அமர்ந்து குடித்து சுகாதார வளாகத்தை பாராக மாற்றி வருகின்றனர். போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அப்பகுதி மக்கள் கூறுகையில்; மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் செயல்பட்டு வந்த பழைய சுகாதார வளாக கட்டடம் அகற்றப்பட்டு புதிய கட்டடம் கட்டப்பட்டது.ஆனால் தற்போது, அதையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மதியம் 12:00 மணிக்கு மதுக்கடை திறந்ததிலிருந்து இரவு 10 :00 மணி வரை குடிகாரர்கள், வளாகத்தை சுற்றிலும் அமர்ந்து கூட்டம் கூட்டமாக மது குடித்து வருகின்றனர். சுகாதார வளாகத்திற்கு செல்லவே பெண்கள் அச்சமடைகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ