உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  ரயிலில் மானாமதுரை வந்த உத்தரபிரதேச பக்தர்கள்

 ரயிலில் மானாமதுரை வந்த உத்தரபிரதேச பக்தர்கள்

மானாமதுரை: மானாமதுரைக்கு ரயிலில் வந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பக்தர்கள் 13க்கும் மேற்பட்ட பஸ்களில் ராமேஸ்வரம் சென்றனர். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாரத் கவுர் திட்டத்தின் மூலம் சிறப்பு ரயிலில் ராமேஸ்வரத்திற்கு செல்ல நேற்று மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தனர். ராமேஸ்வரத்தில் ரயில்களை நிறுத்த போதிய இடம் இல்லாத காரணத்தினால் மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனிலேயே சிறப்பு ரயில் நிறுத்தப்பட்டது. இங்கிருந்து 13க்கும் மேற்பட்ட அரசு பஸ்சில் பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு சென்றனர். பக்தர்கள் கூறியதாவது: புனித தலமான ராமேஸ்வரத்திற்கு முதன் முறையாக வருவதில் மிகுந்த சந்தோஷமாக உள்ளது. சிறப்பு ரயிலில் பக்தர்கள் வர மத்திய அரசு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. இதேபோன்று அடிக்கடி சிறப்பு ரயில்களில் ஆயிரக்கணக்கானோர் ராமேஸ்வரத்திற்கு வந்து செல்வதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி