உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / கிணற்றில் தவறி விழுந்து சிறுவன், சிறுமி பலி

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன், சிறுமி பலி

தென்காசி:தென்காசி மாவட்டம் கடையநல்லுார் அருகே குமந்தாபுரத்தை சேர்ந்த ராணுவ வீரர் மந்திரியின் மகன் உஸஸ் காந்த், 9. இவர் 4ம் வகுப்பு படித்தார். உஸஸ்காந்தும், அவரது தம்பியும் குளிப்பதற்காக கிணற்றில் இறங்கினர். அப்போது தவறி விழுந்து உஸஸ்காந்த் இறந்தார். பலியான அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். கடையநல்லுார் போலீசார் விசாரித்தனர்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரைகண்டார்குளத்தைச் சேர்ந்த தங்கமுருகன் மகள் கனிஷ்கா, 8. வீடு அருகே பொதுக்கிணற்றில் மேல் கம்பிவலை போடப்பட்டிருந்தது. வலை மீது அந்த சிறுமி விளையாடி கொண்டிருந்தார். வலை திடீரென அறுந்து விழுந்ததில் கனிஷ்கா கிணற்றில் விழுந்தார்.தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்த கனிஷ்கா உடலை மீட்டனர். சேர்ந்தமரம் போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !