உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / மெயின் அருவி, பழைய குற்றாலத்தில் தடை ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

மெயின் அருவி, பழைய குற்றாலத்தில் தடை ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

குற்றாலம்:குற்றாலத்தில் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் நேற்று மூன்றாவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது. மாலையில் ஐந்தருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தது.குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் நேற்று ௩வது நளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியில் நேற்று மாலை 5 மணிக்கு மேல் சற்று தண்ணீர் குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். புலியருவிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.குண்டாறு அணை மேலே உள்ள தனியார் அருவிகள் மூடப்பட்டதால், சுற்றுலா பயணிகள் கேரளாவுக்கு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை