| ADDED : டிச 03, 2025 09:56 AM
தென்காசி: காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக தென்காசியிலிருந்து வாரணாசி நோக்கி 15 கார்களில் 55 பேர் புறப்பட்ட பயணத்தை பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சோகோ நிறுவன முதன்மை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கொடியசைத்து துவக்கினர். காசி தமிழ் சங்கமம் 2025 தமிழகம் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களின் கலாசார பிணைப்பை வலுப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி துவங்கிய நிகழ்வாகும். இதன் 4-ம் ஆண்டு விழா டிச., 10- தொடங்குகிறது. இதன் ஒரு பகுதியாக தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பிருந்து “அகத்திய முனிவர் வாகனப் பயணம்” நேற்று துவங்கியது. தென்காசியிலிருந்து 15 வாகனங்களில் 55 பேர் புறப்பட்டனர். பா.ஜ. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சோகோ நிறுவன முதன்மை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு, பா.ஜ. மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி, கடையநல்லூர் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கிருஷ்ணமுரளி உள்ளிட்டோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.