மேலும் செய்திகள்
போலீஸ் எனக்கூறி ரூ.44.59 லட்சம் பறிப்பு
11-Dec-2025
அரசு பள்ளியில் மோதல் மாணவர் மண்டை உடைப்பு
06-Dec-2025
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ஆதனுாரில் நேற்று, மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது. இதில், திருமண்டங்குடியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் கரும்பு விவசாயிகள், 50க்கும் மேற்பட்டோர், மனு அளிக்க காத்திருந்தனர். ஆனால், முகாமிற்கு பாபநாசம் எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, கலெக்டர், ஆர்.டி.ஓ., மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் யாரும் பங்கேற்றவில்லை.இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், 'கலெக்டர், எம்.எல்.ஏ., எங்கே; எங்கள் மனுக்களை யாரிடம் கொடுப்பது' என கேள்விகளை எழுப்பி கூச்சலிட்டனர். இது குறித்து கரும்பு விவசாயிகள் கூறியதாவது:திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலையில், வேறு மாவட்டத்தில் இருந்து தினந்தோறும் டேங்கர் லாரிகளின் மூலம் கரும்பு கழிவுகளை எடுத்து வந்து, சாராய உற்பத்தி நடைபெறுகிறது. ஆலையில் கழிவுநீரை பூமிக்கு அடியிலும், பாசன வாய்கால்களிலும் திறந்து விடுகின்றனர்.இதனால் குடிநீர், நிலத்தடி நீரும் மாசுபடுகிறது, சுற்றுச்சூழலும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் சுவாசிக்கவே முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும் என, கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி மனு அளிக்கப்பட்டது.இது தொடர்பாக, மக்களுடன் முதல்வர் முகாமில் மனு அளிக்க வந்தால், உயர் அதிகாரிகள் யாரும் வரவில்லை. ஏதோ பெயரளவிற்கு நடத்துகின்றனர். இவ்வாறு கோபமாக கூறினர்.
11-Dec-2025
06-Dec-2025