உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் /  இன்னும் 1,300 கீழமை நீதிமன்றங்கள் தேவை ஐகோர்ட் நீதிபதி தகவல்

 இன்னும் 1,300 கீழமை நீதிமன்றங்கள் தேவை ஐகோர்ட் நீதிபதி தகவல்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 1.01 கோடி ரூபாய் மதிப்பில், வக்கீல் சங்க கூடுதல் கட்டடத்தை நேற்று திறந்து வைத்த ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் பேசியதாவது: தமிழகத்தில் இன்னும் பல மாவட்ட, சார்பு, வட்ட நீதிமன்றங்களுக்கு சொந்தமான கட்டடங்கள் இல்லாததால், அரசு கொடுத்த வேறு கட்டடங்களிலும், வாடகை கட்டடங்களிலும் இயங்கி வருகின்றன. ஒருவர் வழக்கு தாக்கல் செய்த நாளில் இருந்து, இரண்டு ஆண்டுகளுக்குள், அதை முடித்தால், மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தமிழகத்தில், தற்போது 1,300 நீதிமன்றங்கள் உள்ளன. மேலும் 1,300 கீழமை நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். அப்போது தான் வழக்கு களுக்கு இரண்டு ஆண்டில் தீர்வு காண முடியும். இதற்கு கட்டடங்கள், நீதிபதிகள், ஊழியர்களின் ஊதிய செலவு, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றுக்கு 16,000 கோடி ரூபாய் நிதி தேவை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி