மேலும் செய்திகள்
பைக்குகள் மோதி 2 வாலிபர்கள் பலி
15-Dec-2025
வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி 4 பேர் சாவு
15-Dec-2025
தஞ்சாவூர்:தஞ்சாவூர் பெரிய கோவிலில், சித்திரை பெருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, 18 நாட்கள் நடந்தது. விழாவின் முக்கிய நாளான, கடந்த 20ம் தேதி தேரோட்டம் நடந்தது. இதை தொடர்ந்து விழாவின் நிறைவு நாளான நேற்று, கோவிலில் இருந்து சந்திரசேகரசுவாமி அம்பாளுடன், சிவகங்கை பூங்காவில் உள்ள குளத்துக்கு சென்றனர். குளக்கரையில் சுவாமி- அம்பாள் எழுந்தருள, அஸ்திரதேவருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பிறகு, குளத்தில் தண்ணீர் இல்லாததால், பெரிய குவளையில் நீர் நிரப்பப்பட்டு அதில் அஸ்திரதேவர் தீர்த்தவாரி கண்டருளினார். பின், கோவிலுக்கு சுவாமி - அம்பாள் வந்ததும், விழா கொடியிறக்கம் செய்யப்பட்டு, சித்திரை விழா நிறைவு பெற்றது.இது குறித்து பக்தர்கள் கூறியதாவது:சிவகங்கை குளம் சோழர்கள் காலத்தில் மழை நீரை சேமித்து பயன்படுத்தப்பட்டது. ஆனால் இதற்கான நீர்வழி பாதைகள் தற்போது இல்லாமல் போனதாலும், போதிய மழை நீரை சேமிக்க குளம் முறையாக துார்வாராமல் போனதாலும் குளத்தில் தண்ணீர் தேக்கி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.இதனால் இந்தாண்டு தீர்த்தவாரி குவளையில் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது வேதனை அளிக்கிறது.இவ்வாறு கூறினர்.
15-Dec-2025
15-Dec-2025