உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / அடிதடியில் ஈடுபட்ட பா.ஜ. மகளிரணி தலைவி நீக்கம்

அடிதடியில் ஈடுபட்ட பா.ஜ. மகளிரணி தலைவி நீக்கம்

தஞ்சாவூர்:தஞ்சாவூர் பா.ஜ. தெற்கு மாவட்ட மகளிரணி செயலராக ஜெகதீஸ்வரி, தலைவியாக கவிதா இருந்தனர். இருவருக்கும், கட்சி ரீதியாக கருத்து வேறுபாடு நீடித்தது. கடந்த 13ம் தேதி, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஜெகதீஸ்வரி வீட்டில் இருந்த குக்கர் மூடியால், கவிதா தாக்கினார். இதில், ஜெகதீஸ்வரிக்கு பலத்த காயம் ஏற்பட்டு, தஞ்சாவூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். கவிதா உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.இதற்கிடையே, பா.ஜ., தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் ஜெய் சதீஷ், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கவிதாவை பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி