உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / முஸ்லிம் பள்ளிக்கூடத்திற்கு சீல் பின்னணியில் தி.மு.க. என புகார்

முஸ்லிம் பள்ளிக்கூடத்திற்கு சீல் பின்னணியில் தி.மு.க. என புகார்

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில், '1975ம் ஆண்டிற்கு முன்பு, அதிராம்பட்டினம் மக்தும் பள்ளி அருகில் உள்ள ரேடியோ பார்க் செயல்படாமல், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது.அந்த இடம் அரசுக்கு சொந்தமானது என்பதால், நீண்ட கால குத்தகைக்கு விடும்படி கேட்டதன் படி, அந்த பள்ளிக்கு அடிநில குத்தகைக்கு விடப்பட்டது.நிர்ணயிக்கப்பட்ட குத்தகையை செலுத்தி, பள்ளி இயங்கி வந்தது. இப்போது பள்ளி வேறு இடத்தில் செயல்படுகிறது. எனினும், பேரூராட்சி இடத்தை கைவிடவில்லை.எனவே, அந்த இடம் தொடர்பாக பள்ளி நிர்வாகமும், பேரூராட்சி நிர்வாகமும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இதில் பேரூராட்சிக்கு சாதகமான தீர்ப்பு வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், நகராட்சி கமிஷனர் சித்ரா சுகன்யா தலைமையிலான அலுவலர்கள், போலீஸ் பாதுகாப்போடு பள்ளி வளாகத்தின் கேட்டை மூடி, 'சீல்' வைத்தனர். மேலும், பொக்லைன் இயந்திரத்துடன் வந்து, பள்ளி பெயரை கறுப்பு பெயின்டால் அழித்து, வேறு பலகை வைத்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனியார் பள்ளி நிர்வாகம் மற்றும் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறியதாவது:பள்ளி நிர்வாகத்திற்கு இடத்தை தர, தி.மு.க., அரசு முடிவு செய்தது. ஆனால், பேரூராட்சி துணைத் தலைவராகவும், தற்போது, நகராட்சி துணை சேர்மனாக உள்ள குணசேகரன் எதிர்ப்பு தெரிவித்தார்.தற்போது, அவரது துண்டுதலால் தான் இந்த பிரச்னையை நகராட்சி நிர்வாகம் கையில் எடுத்துள்ளது.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை