உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரூ.10 லட்சம் கடன் கொடுத்தபெண்ணுக்கு கொலை மிரட்டல் தம்பதி மீது வழக்குப்பதிவு

ரூ.10 லட்சம் கடன் கொடுத்தபெண்ணுக்கு கொலை மிரட்டல் தம்பதி மீது வழக்குப்பதிவு

தேனி : தேனியில் நகைகளை அடகு வைத்து ரூ.10 லட்சம் கடன் கொடுத்து உதவி செய்த பெண்ணின் வீட்டில் அத்துமீறி நுழைந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த கார்மென்ட்ஸ் நிறுவன உரிமையாளர் மணிகண்டன் 39, அவரது மனைவி சத்தியா 35 ஆகியோர் மீது அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.தேனி பாரஸ்ட் ரோடு முதல் தெரு கார்மெண்ட்ஸ் நிறுவன உரிமையாளர் மணிகண்டன் 39. இவரது நிறுவனத்தில் டெய்லர் பணியில் அல்லிநகரம் சிட்டு தெரு மல்லிகாதேவி 42, பணிபுரிந்தார். 2022 ல் மணிகண்டன், அவரது மனைவி சத்தியா ஆகியோர் தங்களது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை எனவும், மருத்துவச் செலவிற்கு பணம் வேண்டும் என கேட்டனர். மல்லிகாதேவிதான் வைத்திருந்த தங்கநகைகளை அடகு வைத்து ரூ.10 லட்சத்தை மணிகண்டனிடம் வழங்கினார்.பின் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி, முறையான பதில் அளிக்கவில்லை. அதிர்ச்சி அடைந்த மல்லிகாதேவி தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் புகார் அளித்தார்.இதனால் ஆத்திரம் அடைந்த கார்மெண்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர், ஜூன் 26ல் மல்லிகாதேவியின் வீட்டிற்கு சென்று, கைகளால் தாக்கி, சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து கொலை மிரட்டல் விடுத்தார். அல்லிநகரம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மணிகண்டன், சத்தியா மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், மோசடி, கொலை மிரட்டல் பிரிவுகளில் வழக்கப் பதிந்து விசாரிக்கின்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ