உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு

பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு

தேவதானப்பட்டி: மனைவியை பார்க்க மாமியார் வீட்டுக்கு சென்றவரின் வீட்டில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள நகை, ரூ.40 ஆயிரம் திருடு போனது.தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டி ரைஸ்மில் தெருவைச் சேர்ந்தவர் முருகவேல் 38. இவரது மனைவி முனியம்மாள் 33. கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக 5 மாதங்களுக்கு முன்பு முனியம்மாள் மேலக்காமக்காபட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு குழந்தையுடன் சென்றார். மனைவியை பார்ப்பதற்கு முருகவேல் மாமியார் வீட்டுக்கு சென்றார். அப்போது மர்மநபர்கள் முருகவேல் வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்து. பீரோவை உடைத்து ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 2 பவுன் தங்க செயின், அரை பவுன தங்க மோதிரம், அரை பவுன் தங்கத்தோடு மற்றும் ரூ.40 ஆயிரத்தை திருடி சென்றனர். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை