| ADDED : மே 05, 2024 03:30 AM
கம்பம், : தேனி மாவட்டத்தில் டீன் ஏஜ் திருமணம் மற்றும் குழந்தை பிறப்பு சதவீதம் அதிகரித்து வருவதை கட்டுக்குள் கொண்டு வர, பெண்ணின் திருமண வயது 21 என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுக்க குடும்ப நலத்துறை முன்வர வேண்டும்.தேனி மாவட்டத்தில் 3 குழந்தைள் மற்றும் அதற்கு மேல் குழந்தைகள் பெற்ற பெண்கள் 200 க்கும் மேல் இருப்பதும், இது தமிழகத்தில் பிற மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது, முதலிடம் பெறுவதாகவும் கூறுகின்றனர்.மேலும் தேனி மாவட்டத்தில் சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பு ஒன்றில் 20 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 200 பேர்களுக்கு மேல் திருமணம் செய்துள்ளனர். இதில் 30 பேர்களுக்கு அபார்சன் ஆகி உள்ளது . அது தானாக நடந்ததா அல்லது அவர்களாக கருக்கலைப்பு செய்தனரா என தெரியவில்லை. எனவே, பெண்ணின் திருமண வயது 21 என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் முன்னெடுக்கவும் குடும்பநலத்துறையை அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் அதற்கான விழிப்புணர்வு பிரசாரங்கள் போதிய அளவு மேற்கொள்ளவில்லை. பிரசாரத்தை முன்னெடுக்க குடும்ப நலத்துறை முன்வர வேண்டும் . இல்லையென்றால் தேனி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை தடுக்க இயலாது.