உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மோடி மக்களின் தேவையை பூர்த்தி செய்யவில்லை நடிகர் கார்த்திக் பிரசாரம்

மோடி மக்களின் தேவையை பூர்த்தி செய்யவில்லை நடிகர் கார்த்திக் பிரசாரம்

ஆண்டிபட்டி: ' பிரதமர் மோடி தமிழக மக்களின் தேவையை பூர்த்தி செய்யவில்லை' என சினிமா நடிகர் கார்த்திக் ஆண்டிபட்டியில் அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து பேசினார்.அவர் பேசியதாவது: நாடு நல்லா இருக்க வேண்டும் என்று நானும், நீங்களும் நினைக்கிறோம். அதற்கு இரட்டை இலைக்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்யுங்கள். நமது வேட்பாளர் ஏழு மொழிகளில் பேசக்கூடியவர். நானும் நான்கு மொழிகளில் பேசுவேன் என்று ஹிந்தி தெரிந்த ஒருவரிடம் உரையாடினார். போதும் இதற்கு மேல் வேண்டாம் இது தமிழ்நாடு என்று சொல்லி மீண்டும் தமிழில் பேசினார். பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார். அவர் ஏன் வருகிறார் என்று தெரியும். வராதீர்கள் என்று நாம் சொல்ல மாட்டோம். தமிழகத்துக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை செய்துவிட்டு வாருங்கள். எங்கள் மக்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்கள் மக்களுக்கு என்ன வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். மனம் இல்லாதவர்களிடம் பணம் இருந்து என்ன பயன் பதவி இருந்து என்ன பயன். அதிக பவர், பதவி வரும்போது மனிதன் மாறுகிறான். சிம்மாசனத்தில் உட்காரும்போது மரத்தில் ஏறி விட்டான். யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை. உண்மையை சொல்கிறேன். மூன்றாவது முறையும் நாங்கள் ஏமாற மாட்டோம். மக்கள் நிறைய எதிர்பார்ப்புடன் உங்களை 2வது முறையாக பதவியில் உட்கார வைத்தார்கள். நீங்கள் மக்கள் தேவையை பூர்த்தி செய்யவில்லை. நான் அ.தி.மு.க., வுடன் ஐக்கியமாகி விட்டேன். இது 4வது முறையாக நான் வந்து செல்லும் தேர்தல். அந்த உரிமையோடு தான் உங்களிடம் ஓட்டு கேட்கிறேன். இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். நீங்களும் வெற்றி பெறுவீர்கள். அ.தி.மு.க., வெற்றிக்குப் பின் அழகிய லைலா பாடல் பாடுவோம் இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை