உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திருட முயற்சி: போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

திருட முயற்சி: போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி ஒன்றியம், புள்ளிமான் கோம்பை காலனியை சேர்ந்தவர் சரவணன் 47. இரு நாட்களுக்கு முன் இரவில் வீட்டின் கதவை திறந்து வைத்து குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த நபர் வீட்டினுள் திருட முயற்சி செய்துள்ளார். வீட்டில் இருந்தவர்கள் சத்தமிடவும் அங்கிருந்து தப்பி ஓடிய நபரை பக்கத்து வீட்டில் குடியிருப்பவர்கள் சுற்றி வளைத்து பிடித்து ஆண்டிபட்டி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் திருட வந்தவர் நிலக்கோட்டை தாலுகா, விராலிப்பட்டியைச்சேர்ந்த பிரசாந்த் 22, என்பது தெரியவந்தது. போலீசார் திருட வந்தவரை கைது செய்தனர். இவர் மீது வத்தலகுண்டு, விருவீடு போலீஸ் ஸ்டேஷன்களில் ஏற்கனவே வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை