உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பரதநாட்டிய அரங்கேற்றம்

பரதநாட்டிய அரங்கேற்றம்

தேனி: தேனியில் அபிநயா பரத நாட்டிய இசைப்பள்ளி மாணவி ஹேமலதா பரத நாட்டியம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. தேனி நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா தலைமை வகித்தார். சென்னை நிருத்தியாலயா நடன இசை அகடாமி இயக்குனர் கிருஷ்ணகுமார் , டாக்டர் முத்தாரம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பரதம் அரங்கேற்றிய ேஹமலதாஇவர் 12 ஆண்டுகளாக பரதம் கற்று, யுவகலா பாரதி, கலை இளைமணி, நடன தாரகை பட்டங்களை பெற்றுள்ளார்.அரங்கேற்ற நிகழ்ச்சியில் நட்டுவாங்க கலைமணி கவிதா, வாய்ப்பாடு செந்தில் குமார், மிருதங்கம் முத்துக்குமார், வயலின் சந்துரு ஆகியோர் வாசித்தனர். ஏற்பாடுகளை இசைப்பள்ளி நிர்வாகி மனோகரன் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை