உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பாரம்பரிய வாழ்க்கை முறை குறித்து விளக்கக் கூட்டம்

பாரம்பரிய வாழ்க்கை முறை குறித்து விளக்கக் கூட்டம்

கடமலைக்குண்டு, : கடமலைக்குண்டு அய்யனார் கோயிலில் தானம் அறக்கட்டளை சார்பில் பாரம்பரிய நடைபயணம், வாழ்க்கை முறை, வாழ்வாதாரங்கள் குறித்த விளக்கக் கூட்டம் நடந்தது.கடமலைக்குண்டு வட்டார களஞ்சியம் நிர்வாக இயக்குனர் சங்கவி வரவேற்றார். அய்யனார் சுவாமியின் வரலாறு குறித்து சமூக ஆர்வலர் ஜெயராஜ், காளியம்மாள் ஆகியோர் பேசினர். பாரம்பரிய நடை பயணம், பாரம்பரிய வாழ்க்கைமுறை குறித்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ராமசாமி பேசினார். ஆண்டிபட்டி வட்டார உதவி வேளாண்மை அலுவலர் குமரேசன் பங்கேற்றார். நிகழ்ச்சியில் சிறு தானியத்தில் மதிப்பு கூட்டி செய்யப்பட்ட கம்பு, லட்டு, பாசிப்பயறு, மூலிகை சூப் வழங்கப்பட்டது. களஞ்சியம் நிர்வாகத்தின் கணக்காளர் தேவி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கடமலைக்குண்டு வட்டார களஞ்சிய பணியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ