| ADDED : மே 27, 2024 05:58 AM
பெரியகுளம் : பெரியகுளத்தில் ரேஷன் கடையில் இம்மாதம் துவரம் பருப்பு, பாமாயில் எண்ணெய் வழங்கப்படாததால் பொது மக்கள் சிரமப்படுகின்றனர்.பெரியகுளம் தாலுகா பகுதிகளில் கூட்டுறவுத் துறையின் கீழ் 72 ரேஷன் கடைகளில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான கார்டுதாரர்கள் உள்ளனர். மாதந்தோறும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்கள் ரூ.30க்கு ஒரு கிலோ துவரம் பருப்பு, ரூ.25 க்கு ஒரு லிட்டர் பாமாயில் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இம்மாதம் (மே) பெரும்பாலான கார்டுதாரர்களுக்கு பருப்பு, பாமாயில் வழங்கப்படவில்லை. இதனால் பொது மக்கள் வெளி மார்க்கெட்டில் ரூ.160க்கு ஒரு கிலோ துவரம் பருப்பும், ரூ. 110க்கு ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் வாங்குவதற்கு சிரமப்படுகின்றனர். பருப்பு, எண்ணெய் விரைவில் வழங்குவதற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியகுளம் வட்ட வழங்கல் அலுவலர் கார்த்திக் கூறுகையில்: கடந்த மாதம் பருப்பு, எண்ணெய் இருப்பில் கார்டுதாரர்கள் பாதியளவிற்கு வழங்கப்பட்டது. ஓரிரு நாட்களில் பருப்பு, எண்ணெய் வந்து விடும். இம்மாதம் கடைசி வரை கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும்.' என, தெரிவித்தார்.