உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குடிநீரில் கலக்கும் கழிவு நீர் இடத்தை கண்டுபிடிக்க திணறல் -கூடலுார் மெயின் பஜாரில் போக்குவரத்து பாதிப்பு

குடிநீரில் கலக்கும் கழிவு நீர் இடத்தை கண்டுபிடிக்க திணறல் -கூடலுார் மெயின் பஜாரில் போக்குவரத்து பாதிப்பு

கூடலுார்: கூடலுார் மெயின் பஜார் குடிநீர் குழாயில் கழிவு நீர் கலக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல், கடந்த மூன்று நாட்களாக நகராட்சி நிர்வாகத்தினர் திணறி வருகின்றனர்.கூடலுார் மெயின் பஜார், பள்ளிவாசல் தெரு, நடுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் சப்ளை செய்யப்படும் குடிநீரில் கழிவு நீர் கலந்து சப்ளையானது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கழிவுநீர் கலக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்காக மெயின் பஜாரில் நகராட்சி நிர்வாகத்தினர் பல இடங்களில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் எந்த இடத்தில் கழிவு நீர் கலக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.மெயின் பஜாரில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும். வியாபார நிறுவனங்கள் அதிகம். சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால் வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட பழைய சிமென்ட் குழாய்களை மாற்றி புது குழாய்களை பதிக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ