உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அதிக வெப்பம், தொடர் மழையால் திராட்சையில் தொடரும் சிக்கல் விலையும், விற்பனையும் சரிந்தது

அதிக வெப்பம், தொடர் மழையால் திராட்சையில் தொடரும் சிக்கல் விலையும், விற்பனையும் சரிந்தது

கம்பம்: அதிக வெப்பத்தால் திராட்சை பழுப்பதில் கால தாமதம் ஏற்பட்ட நிலையில் மழை பெய்வதால் பழங்களில் உடைப்புஏற்பட்டு விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்திய அளவில் திராட்சை சாகுபடியில் கம்பம் பள்ளத்தாக்கு குறிப்பிட்ட இடத்தை பிடித்துள்ளது. மாவட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கரில் திராட்சை சாகுபடியாகிறது.பெரும்பாலும் பன்னீர் திராட்சையும், கணிசமாக விதையில்லா திராட்சையும் சாகுபடி செய்யப்படுகிறது.திராட்சை சாகுபடியில் முதலிடம் பிடித்துள்ள மஹாராஷ்டிராவில் ஆண்டிற்கு ஒரு அறுவடை மட்டுமே செய்கின்றனர். ஆனால் தேனி மாவட்டத்தில் ஆண்டிற்கு 3 முறை அறுவடை மேற்கொள்ளப்படுகிறது.விதையில்லா திராட்சை வரத்துள்ள நவம்பர் முதல் மார்ச் வரை விலை குறைவாக கிடைக்கும். அதன்பின் பன்னீர் திராட்சைக்குவிலை கிடைக்கும். பன்னீர்திராட்சை விலை கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.60 முதல் 70 வரை இருந்தது.10 நாட்களாக மழை பெய்து வருவதால், வியாபாரம் 'டல்'லாகி விலை கிலோ ரூ 30 முதல் 40 வரை குறைந்துள்ளது. வரத்தும் குறைந்துள்ளது. காரணம் அதிக வெப்பம் காரணமாக கொடியில் பழுப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. மேலும் தொடர் மழை காரணமாக பழங்களில் உடைப்பு ஏற்பட்டு வரத்தும் குறைந்துவிட்டது.தற்போது கிலோ ரூ. 30 முதல் ரூ.40 வரை விலை கிடைக்கிறது.விவசாயிகள் சங்க தலைவர் முகுந்தன் கூறுகையில், அதிக வெப்பத்தாலும் பிரச்னை எழுந்தது. தற்போது மழை பெய்வதாலும் உடைப்பு ஏற்பட்டு வரத்து குறைந்துள்ளது. அதற்கு தகுந்தது போல் கடைகளில் வியாபாரமும் டல் அடிக்கிறது. எனவே விலை ரூ.60 ல் இருந்து ரூ.30 வரை குறைந்து விட்டது. சமீபத்திய மழை காரணமாக பன்னீர் திராட்சைக்கு கலர் கிடைக்கவில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை