உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

தேனி : தேனி என்.ஆர்.டி., நகரில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில், மின் ஊழியர் மத்திய அமைப்பு சி.ஐ.டி.யு., சார்பில், காலிப் பணியிடங்களை நிரப்பிடவும், பணியாளர்களுக்கு பணப் பயன்களை வழங்கிட காலதாமதம் செய்யக்கூடாது.அரசு ஊழியர் குடும்ப நல நிதி ரூ.5 லட்சம் மின் ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடந்தது.தேனி திட்டச் செயலாளர் தேவராஜ் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் வளர்மதி, திட்டப் பொருளாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்ட நிரவாகி சந்திரசேகர் பேசினர். மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் கோரிக்கைகள் குறித்து பேசினார். பின்னர் ஜூலை 12 ல் வாரியத் தலைவர், மின்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டதால் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை