உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திராட்சையில் புதிய ரகம் அறிமுகம் செய்ய விவசாயிகள் கோரிக்கை ஆராய்ச்சி நிலையம் இருந்தும் பயன் இல்லை

திராட்சையில் புதிய ரகம் அறிமுகம் செய்ய விவசாயிகள் கோரிக்கை ஆராய்ச்சி நிலையம் இருந்தும் பயன் இல்லை

கம்பம் : திராட்சையில் புதிய ரகங்களை அறிமுகம் செய்ய தோட்டக் கலை ஆராய்ச்சி நிலையம், திராட்சை ஆராய்ச்சி நிலையமும் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவில் திராட்சை சாகுபடியில் மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடம் பெறுகிறது. புனேயில் உள்ள தேசிய திராட்சை ஆராய்ச்சி நிலையம் புதிய ரகங்களை அறிமுகம் செய்தும், நவீன தொழில்நுட்பங்களை பயிற்றுவித்தும் வருகிறது. மஹாராஷ்டிராவில் ஆண்டிற்கு ஒரு அறுவடை செய்கின்றனர். தேனி மாவட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டிற்கு மூன்று அறுவடை செய்து ஆண்டு முழுவதும் திராட்சை விளையும் பகுதியாக உள்ளது. ஆனைமலையன்பட்டியில் திராட்சை ஆராய்ச்சி நிலையம் 15 ஆண்டுகளுக்கு முன்பே துவக்கப்பட்டது. ஆனால் இதுவரை புதிய ரகங்கள் எதையும் ஆராய்ச்சி நிலையம் இதுவரை அறிமுகம் செய்யவில்லை.புனேயில் இருந்து ரெட் குளோப், மெடிக்கா, சரத் சீட்லெஸ் உள்ளிட்ட பல ரகங்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே வாங்கி வந்து சாகுபடி செய்து பார்த்தனர். ஆனால் பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள், மார்க்கெட்டிங்கில் பிரச்னைகள் ஏற்பட்டதால் அந்த ரகங்கள் சாகுபடியை கைவிட்டனர். தற்போது முழுக்க முழுக்க பன்னீர் திராட்சையே சாகுபடி செய்யப்படுகிறது.இது தொடர்பாக சுருளிப் பட்டி திராட்சை சாகுபடியாளர்கள் சங்க தலைவர் முகுந்தன் கூறுகையில், பன்னீர் திராட்சையை மேம்படுத்தி புதிய ரகத்தை அறிமுகம் செய்யலாம். ரெட் குளோப், சரத் சீட்லெஸ் போன்ற ரகங்கள் சாகுபடி செய்து அது சரியாக பலன் தரவில்லை என்று விட்டு விட்டோம். புதிய ரகங்களை அறிமுகம் செய்ய ஆராய்ச்சி நிலையம் முன்வர வேண்டும் என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை