| ADDED : ஜூலை 08, 2024 12:03 AM
தேனி: மாவட்டத்தில் விக்கிரவாண்டி தொகுதியில் ஓட்டுரிமை உள்ள தொழிலாளர்களுக்கு ஜூலை 10ல் நடக்கும் இடைத்தேர்தலில் ஓட்டளிக்கும் வகையில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க தொழிலக பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குனர் விமலா அறிவுறுத்தி உள்ளார்.அவரசு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ல் நடக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் விக்கிரவாண்டியில் ஓட்டுரிமை உள்ள தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்களக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொழிலாளர்கள் புகார் அளிக்க ஏதுவாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. தொழிலாளர்கள் திண்டுக்கல், தேனி மாவட்ட துணை இயக்குனர் அமர்நாத்திடம் 95516 21162, கட்டுமான பணி நிறுவனங்கள் தொடர்பாக துணை இயக்குனர் சுதாகரிடம் 78713 87668 என்ற அலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.