உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஐந்து ஆண்டுகளில் கடந்த ஏப்.ல் சராசரி மழை குறைவு

ஐந்து ஆண்டுகளில் கடந்த ஏப்.ல் சராசரி மழை குறைவு

தேனி: தேனி மாவட்டத்தில் ஐந்தாண்டுகளில் கடந்த ஏப்.,ல் மழை குறைந்தளவு பதிவாகி உள்ளது.மாவட்டத்தில் பெய்யும் மழை அளவை கணக்கிட 13 இடங்களில் மழைமானிகள் உள்ளன. இதன்படி மாவட்டத்தில் ஏப்., ல் சராசரி மழை அளவு 99 மி.மீ., மழை கிடைக்க வேண்டும். ஏப்.,ல் கோடைகாலம் என்பதால் பெரும்பாலான ஆண்டு சராசரியை விட குறைந்த அளவே மழை பதிவாகும். 2020ல் ஏப்.,ல் 56.5 மி.மீ., 2021 ஏப்.,ல் 44.12 மி.மீ., 2022 ஏப்.,ல் 164.19 மி.மீ., 2023 ஏப்.,ல் 86.22 மி.மீ., மழை அளவுகள் பதிவாகி இருந்தன. இந்தாண்டு ஏப்ரலில் 9 நாட்கள் மட்டும் மழை பதிவானது. அதிலும் ஏப்.,13ல் மட்டும் மாவட்டத்தில்பரவலாக மழை பெய்தது. கடந்த மாதம் சராசரி 21.44 மி.மீ., ஆகும். இது கடந்த ஐந்து ஆண்டு சராசரியை ஒப்பிடுகையில் மிக குறைவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை