உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கூடலுார் சிக்கன் கடைகளில் மதுவிலக்கு போலீசார் ஆய்வு -மது பாட்டில்கள் விற்றால் எச்சரிக்கை

கூடலுார் சிக்கன் கடைகளில் மதுவிலக்கு போலீசார் ஆய்வு -மது பாட்டில்கள் விற்றால் எச்சரிக்கை

கூடலுார் : கூடலுார் சிக்கன் கடைகளில் மதுவிலக்கு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தடையை மீறி மது பாட்டில்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து ஏராளமானோர் பலியான சம்பவத்திற்கு பின் மதுவிலக்கு போலீசார் திடீர் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர். தடையை மீறி சிக்கன் கடைகளிலும் பொது இடங்களிலும் மதுபாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக திடீர் ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு உத்தமபாளையம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சூரிய திலகராணி தலைமையில் கூடலுாரில் உள்ள சிக்கன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். தடையை மீறி விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். பெயரளவில் மதுவிலக்கு போலீசார் ஆய்வு செய்து சென்ற பின், மீண்டும் சிக்கன் கடைகளில் மதுபாட்டில்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. அதனால் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு முழுமையாக தடுக்க மதுவிலக்கு போலீசார் முன் வரவேண்டும் என தன்னார்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி