உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பஸ் டெப்போவில் குவியும் குப்பையால் சுகாதார சீர்கேடு

பஸ் டெப்போவில் குவியும் குப்பையால் சுகாதார சீர்கேடு

தேனி: தேனியில் பழனிசெட்டிபட்டியில் அரசு பஸ் டெப்போ உள்ளது. இங்கு பஸ்கள் நிறுத்தி பராமரித்து இயக்கப்படுகிறது. டெப்போவில் நிறுத்தப்படும் பஸ்கள் தினமும் சுத்தம் செய்யப்படுகிறது. வெளியேற்றும் குப்பையை டெப்போ வளாகத்தில் கொட்டுகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை அகற்றப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில வாரங்களாக குப்பை அகற்றப்படுவதில்லை. டெப்போ வளாகத்தில் ஒரு பகுதி குப்பை நிறைந்து காணப்படுகிறது. குப்பையில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாவதால் ஓய்விற்கு வரும் தொழிலாளர்கள் துாக்கம் இன்றி பாதிக்கப்படுகின்றனர். பலர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுகின்றனர். இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.டெப்போ அதிகாரிகள் கூறுகையில், 'குப்பை அகற்ற பேரூராட்சி நிர்வாகத்திடம் கூறி உள்ளோம். அப்புறப்படுத்துவதாக கூறி உள்ளனர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை