உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இருவர் சொந்தம் கொண்டாடிய விடுதிக்கு சீல்

இருவர் சொந்தம் கொண்டாடிய விடுதிக்கு சீல்

மூணாறு: மூணாறு அருகே வட்டவடையில் தனியார் தங்கும் விடுதிக்கு இருவர் சொந்தம் கொண்டாடியதால் கலெக்டர் பூட்டி ' சீல்' வைத்தார்.வட்டவடை, கோவிலூரில் கோட்டயத்தைச் சேர்ந்தவருக்கு 85 சென்ட் நிலமும் தங்கும் விடுதியும் இருந்தது. அதனை ஆலுவாவைச் சேர்ந்தவருக்கு 2019ல் விற்றார். அதற்கு குறிப்பிட்ட தொகையை கொடுத்ததுடன் மீதி தொகையை பத்திர பதிவு முடிந்ததும் அதனை வைத்து வங்கியில் கடன் பெற்று தருவதாக இருவரிடையே ஒப்பந்தமானது.அதன்படி மீதி தொகையை வழங்காததால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதனிடையே பத்திர பதிவை ரத்து செய்யுமாறு கோட்டயத்தைச் சேர்ந்த தங்கும் விடுதி உரிமையாளர் வருவாய் துறையினரிடம் புகார் அளித்தார்.ஆனால் ஒப்பந்தபடி முழு தொகையும் கொடுத்த பிறகு பத்திர பதிவு நடந்ததாக கூறி ஆலுவாவைச் சேர்ந்தவர் தங்கும் விடுதிக்கு சொந்தம் கொண்டாடியதால் பிரச்னை முற்றியது.ஆகவே ஆவணங்களை பரிசோதித்து உரிமையாளர் யார் என்பது தெரியும் வரை நிலம், தங்கும் விடுதி ஆகியவற்றை கையகப்படுத்தி இடுக்கி கலெக்டர் ஷீபாஜார்ஜ் ' சீல்' வைத்தார். அங்கு தேவிகுளம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை