உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திறந்த நிலையில் செல்லும் கட்டுமான பொருட்களால் அவதி

திறந்த நிலையில் செல்லும் கட்டுமான பொருட்களால் அவதி

தேனி: தேனியில் திறந்த நிலையில் கட்டுமான பொருட்களை வாகனங்களில் எடுத்து செல்வதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதியடைகின்றனர்.தேனி வழியாக லாரி, டிராக்டர்கள் மூலம் கட்டுமானத்திற்கு தேவையான எம்.சாண்ட், ஜல்லி, செங்கல் உள்ளிட்டவை கொண்டு செல்லப்படுகின்றன. கட்டுமான பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் தார்பாய் மூலம் மூடி செல்லாததால் ஜல்லிகற்கள் ரோட்டில் சிதறியும், எம்.சாண்ட் துாசி ரோட்டில் செல்வோர் கண்களை பதம் பார்க்கிறது. ரோட்டில் சிதறி விழுந்த ஜல்லிகற்களால் டூவீலர்களில் செல்வோர் கீழே விழும் நிலை உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கட்டுமான பொருட்களை உரிய பாதுகாப்புடன் எடுத்து செல்ல போக்குவரத்து போலீசார், அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை