உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மதுபார் மாற்ற தொடர் போராட்டம் நடத்திய கட்சியினர் மவுனம்; பிரச்னை தீர்வாகாததால் அதிருப்தி

மதுபார் மாற்ற தொடர் போராட்டம் நடத்திய கட்சியினர் மவுனம்; பிரச்னை தீர்வாகாததால் அதிருப்தி

பெரியகுளம் : பெரியகுளத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படும் மதுபார்களை மாற்ற கோரி தொடர் போராட்டங்களை நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி மவுனம் காத்து வருகிறது.பெரியகுளம் தென்கரை மூன்றாந்தல் காந்தி சிலை அருகே, வடுகபட்டி ரோடு, தேனி ரோட்டில் 3 இடங்களில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மாநில நெடுஞ்சாலையில் தனியார் மதுபார்கள் செயல்படுகின்றனர்.இந்த பார்களால் மெயின் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது. பார்களில் இருந்து போதையில் டூவீலரில் வருவோர் திண்டுக்கல்- தேனி ரோட்டில் வரும் வாகனங்கள் மீது மோதி விபத்து மற்றும் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்துகின்றனர்.மதுபார் அருகே மூன்றாந்தல் பஸ் நிறுத்தம் உள்ளதால் அவ்வழியே செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகளுக்கு போதை ஆசாமிகளால் அடிக்கடி அச்சுறுத்தல்,இடையூறு தினமும் நடக்கிறது.இதனால்மது பார்களை அகற்றக்கோரி சில கட்சிகள் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய சில கட்சிகள் மீண்டும் பிரச்னையை கிளப்பாத வகையில் ஏனோ அமைதியாகி விடுகின்றனர்.தீவிரமாக மார்க்சிஸ்ட் கம்யூ., முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் பாலபாரதி, லாசர் ஆகியோரது தலைமையில் ஆர்ப்பாட்டம், முற்றுகை, காத்திருப்பு, பூட்டு போடும் போராட்டங்கள் தொடர்ந்து நடத்தினர். 2023 செப்., நடந்த போராட்டத்தின் போது மூன்றாந்தல் பகுதியே ஸ்தம்பித்தது. கலால் பிரிவு உதவி ஆணையர் ரவிச்சந்திரன், 3 பார்களை மாற்ற ஒரு மாதம் அவகாசம் கோரியதால் போராட்டத்தை ஒத்தி வைத்தினர்.பின் தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் என நீட்டித்து,நீட்டித்துலோக்சபா தேர்தல் முடிவுகள் முடிந்தும் பார்கள் மாற்றப்படும் எனகலால்துறைவாக்குறுதிவழங்கியது. நாட்களும், மாதங்களும் கடந்ததே தவிர மதுபார் மூடுவதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதனால் மூன்றாந்தல் பகுதி போதையில் தள்ளாடுவதால் பெண்கள் 'அரசு' மீதுமக்கள்அதிருப்தி அடைந்துள்ளனர்.பல ஊர்களில் மக்களுக்கு இடையூறான டாஸ்மாக் கடைகள் பிரச்னை உருவான உடன்மூடப்படுகிறது. ஆனால் பெரியகுளத்தில் செயல்படும் தனியார் மதுபார் மூடும் பிரச்னை தீர்ந்தபாடில்லை.மதுபார் மூடும் விஷயத்தில் பா.ஜ., காங்., மற்றும் அ.தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனம் காப்பதுஏன் என தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை