உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மேகமலை பகுதிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை

மேகமலை பகுதிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை

கம்பம்: மேகமலை பகுதிகளுக்கு கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முன்வர வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டத்தில் வைகை அணை, சோத்துப் பாறை, கும்பக்கரை, சுருளி அருவி, மேகமலை பகுதிகள் என பல சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில் மேகமலைப் பகுதியில் ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராசா மெட்டு, தூவானம் உள்ளிட்ட பல பகுதிகள் சுற்றுலா பயணிகளை கவர்கிறது.இங்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. காலை, மாலை என குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே உள்ளது. சொந்த வாகனம் அல்லது வாடகை கார்களில் மட்டுமே செல்ல முடியும் என்ற நிலை உள்ளதால், சுற்றுலா செல்ல நினைக்கும் நடுத்தர வர்க்கத்தினர் செல்ல முடியாத நிலை உள்ளது .எனவே சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முன்வர வேண்டும்.குறைந்தபட்சம் ஹைவேவிஸ் பேரூராட்சி வரையாவது பஸ்களை கூடுதலாக இயக்க முன்வர வேண்டும். அவ்வாறு இயக்கும்பட்சத்தில் சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் மேகமலை பகுதியை கண்டு ரசிக்க வாய்ப்பு ஏற்படும். கம்பம் மற்றும் தேனி அரசு போக்குவரத்துக் கழக மேலாளர்கள் கூடுதல் பஸ்களை இயக்க முன் வர வேண்டும். இதன்மூலம் மேகமலை பகுதிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை