உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி

எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி

தேனி : மாவட்டத்தில் 1,2,3 ம்வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்து திட்ட பயிற்சி வட்டார வள மையங்களில் வழங்கப்பட்டது.அரசு, உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களுக்கு முதல் பருவத்திற்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தேனி வட்டார வளமையத்தில் ஒன்று முதல் 3ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதனை பயிற்சியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன துணை இயக்குனர் ஆனந்தி, சி.இ.ஓ., இந்திராணி ஆய்வு செய்தனர். பயிற்சியில் ஸ்மார்ட் போர்டு பயன்படுத்துவது பற்றி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை