| ADDED : ஏப் 01, 2024 06:45 AM
தேனி: தேனி லோக்சபா தொகுதியில் தங்கி தேர்தல் பணிபுரியும் நபர்களை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தல் ஏப்.,19ல் நடக்கிறது. தேனி தொகுதியில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் உட்பட 25 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு தேர்தல் பணியாற்ற வெளி மாவட்டங்களில் இருந்து நண்பர்கள், நிர்வாகிகள் வந்து பலர் தொகுதிக்குள் தங்கி உள்ளனர். இவர்களை கண்காணிக்கும் பணியை தீவிரப்படுத்த தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பபட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் தங்கும் விடுதிகளில் ஒரு மாதத்திற்கு மேலாக தங்கி உள்ளவர்கள், புதிதாக வந்துள்ளவர்கள், கிராமங்கள், நகர்பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளவர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. சோதனை நடத்திய சில இடங்களில் வெளியூர் நபர்கள் உள்ளூர் வாக்காளர் பட்டியலை வைத்திருந்தது கண்டறிப்பட்டுள்ளது. இதனால் வெளியூர் நபர்கள் பற்றிய கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.