உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.14.17 லட்சம் தங்கம் 82, வெள்ளி 180 கிராம்

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.14.17 லட்சம் தங்கம் 82, வெள்ளி 180 கிராம்

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் உள்ள 12 உண்டியல்களில் சேர்ந்துள்ள காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. இப்பணிக்கு ஹிந்து அறநிலைத்துறை உதவி ஆணையர் கலைவாணன் தலைமை வகித்தார். உண்டியல் எண்ணும் பணியில் சவுராஸ்டிரா கல்லுாரி மாணவர்கள்,மகளிர் சுயஉதவிக்குழுவினர், கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர். கோயில் செயல் அலுவலர் மாரிமுத்து, மேலாளர் பாலசுப்பிரமணி, கணக்காளர் பழனியப்பன் உண்டியல் எண்ணும் பணியை கண்காணித்தனர். உண்டியலில் ரூ.14,17,715 இருந்தது. தங்கம் 82 கிராம், வெள்ளி 180 கிராம் இருந்தன. கடைசியாக 2023 செப்., 29ல் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை