உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி சப்டிவிஷனில் 2269 வழக்குகள் பதிவு

தேனி சப்டிவிஷனில் 2269 வழக்குகள் பதிவு

தேனி; மாவட்டத்தில் தேனி சப் டிவிஷனுக்குட்பட்ட 5 போலீஸ் ஸ்டேஷன்களில் ஓராண்டில் 2269 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக தேனியில் 655 வழக்குகள் பதிவாகி உள்ளது.மாவட்டத்தில் 32 சட்ட ஒழுங்கு, 5 அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் உட்பட 37 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இவை தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, போடி, உத்தமபாளையம் என 5 சப் டிவிஷன்களாக பிரிக்கப்பட்டு டி.எஸ்.பி.,க்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. இது தவிர தேனி, உத்தமபாளையத்தில் மதுவிலக்கு, போதைப் பொருள் தடுப்பு பிரிவு, எஸ்.பி., அலுவலகத்தில் மாவட்ட குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன்கள் இயங்குகின்றன.தேனி சப் டிவிஷனில் 5 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இவற்றில் வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி, அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர்கள் இன்றி, பிற ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகின்றனர். கடந்த ஓராண்டில் தேனியில் 655, பழனிசெட்டிபட்டியில் 597, அல்லிநகரத்தில் 503, வீரபாண்டியில் 451, அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் 63 என மொத்தம் 2,269 வழக்குகள் பதிவாகி உள்ளன. இது தவிர தேனி மதுவிலக்கு, போதை தடுப்புப் பிரிவு போலீசார் 1253 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை