உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சென்னையில் வரும் 9ம் தேதி முன்னாள் மாணவர்கள் மாநாடு

சென்னையில் வரும் 9ம் தேதி முன்னாள் மாணவர்கள் மாநாடு

தேனி:தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் மாநாடு வரும். 9ல் சென்னை வர்த்தக மையத்தில் நடக்கிறது.பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் வாயிலாக அரசுப்பள்ளிகள் மேம்படுத்த தேவையான வசதிகளும் செய்யப்படுகின்றன. இதுவரை, 7 லட்சத்துக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் சென்னை வர்த்தக மையத்தில் வரும் 9ல் மாநில மாநாடு நடக்கிறது. இதில் அரசுப்பள்ளி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய முன்னாள் மாணவர்களுக்கு விருது வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, மாவட்டத்துக்கு 18 அரசுப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட உள்ளன. பள்ளிக்கு இரு முன்னாள் மாணவர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். அவர்களுடன் தலைமை ஆசிரியர் அல்லது ஒரு ஆசிரியர் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கல்வி அதிகாரிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி