உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இன்ஹேலர் வழங்காததால் ஆஸ்துமா நோயாளிகள் பாதிப்பு அரசு மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யாமல் அலட்சியம்

இன்ஹேலர் வழங்காததால் ஆஸ்துமா நோயாளிகள் பாதிப்பு அரசு மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யாமல் அலட்சியம்

மாவட்டத்தில் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனை, ஆண்டிபட்டி, போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய அரசு மருத்துவமனைகள் உள்ளன. தற்போது மழை, பனி, சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக காய்ச்சல், சளி பாதிப்பினால் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சீதோஷ்ண நிலை ஆஸ்துமா நோயாளிகளை கடும் சிரமத்திற்குள்ளாக்குகிறது. சிறப்பு இன்ஹேலர் மருந்து இல்லை ஆஸ்துமா நோயாளிகள் நுரையீரலுக்கு நேரடியாக மருந்தை செலுத்தவும், மூச்சுத்திணறல், சுவாசக்கோளாறுகளை சீராக்க இன்ஹேலர் உதவுகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு நோயின் தன்மைக்கு ஏற்ப இன்ஹேலர் கருவி வழங்கி ஆலோசனையும் டாக்டர்கள் வழங்குகின்றனர். பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு நுரையீரல், சுவாசப்பாதிப்புக்கு வெளிநோயாளிகள் பிரிவிற்கு 50 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது தினமும் நோயாளிகள் எண்ணிக்கை நூறாக உயர்ந்துள்ளது. 20 க்கும் மேற்பட்டோர் உள்நோயாளியாக உள்ளனர். பாதிப்பை பொறுத்து உள்நோயாளிகள், வெளிநோயாளிகளுக்கு பத்து நாட்களுக்கு மாத்திரை, மருந்துகள் வழங்குகின்றனர். நோயாளிகளின் பாதிப்பு தன்மைக்கு ஏற்பவும், உடல் நலத்திற்கு ஒத்துப்போகும் சிறப்பு இன்ஹேலர் மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த சிறப்பு இன்ஹேலர் அரசு மருத்துவமனைகளில் வழங்குவது வழக்கம். தற்போது மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்ஹேலர் மருந்து வழங்குவதில்லை. இதனால் நோயாளிகள் மருத்து கடைகளில் ரூ.350 முதல் ரூ.1200 விலையில் வாங்கும் நிலை உள்ளது. மருந்துவ சேவை கழகம் கொள்முதல் செய்யவில்லை கடந்தாண்டு இந்த மருந்துகளை தனியாரிடம் கொள்முதல் செய்து, அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டது. இந்தாண்டு மருந்து கழகம் கொள்முதல் செய்து வழங்கவில்லை. இதனால் ஏழை, எளிய நோயயாளிகள் விலை கொடுத்து வாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே அனைத்து அரசு மருத்துவமனைக்கு தேவையான சிறப்பு இன்ஹேலர் மருந்துகளை உடனடியாக வழங்க மருத்துவத்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் குமார் கூறுகையில், 'மருத்துவமனைகளில் ஆஸ்துமா, சுவாசக் கோளாறு நோயாளிகளுக்கு 'நெப்லேயர்' சுவாசக் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறப்பு இன்ஹேலர் மருந்துகள் வழங்குவதற்கு, மருத்துவத்துறை இயக்குனரகம், மருத்துவ சேவைகள் கழகத்தில் கோரிக்கை வைத்துள்ளோம்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை