உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  போடி நகராட்சி தலைவரின் கணவரிடம் 2 வது நாளாக அதிகாரிகள் விசாரணை

 போடி நகராட்சி தலைவரின் கணவரிடம் 2 வது நாளாக அதிகாரிகள் விசாரணை

போடி: தேனி மாவட்டம் போடி நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரியின் கணவர் சங்கரிடம் ஏலக்காய் வியாபாரத்தில் வரி ஏய்ப்பு புகாரில் அதிகாரிகள் 2 வது நாளாக விசாரணை நடத்தினர். போடி நகராட்சி தலைவராக தி.மு.க., சேர்ந்த ராஜராஜேஸ்வரி உள்ளார். இவரது கணவர் சங்கர் தி.மு.க., கவுன்சிலர். சங்கர் மகன் லோகேஷ், நண்பருடன் இணைந்து ஏலக்காய் வியாபாரம் செய்கிறார். இதில் இவர்கள் பல கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரில், நான்கு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் 50 பேர் கொண்ட குழுவினர் சங்கரின் வீடு, கோடவுனில் சோதனை செய்தனர். இரண்டு நாட்களுக்கு முன் ராஜராஜேஸ்வரி அதிகாரிகள் முன் ஆஜரானார். நேற்று முன்தினம் மதியம் சங்கர் வீட்டிற்கு வந்து விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். சங்கரை வெளியே செல்ல விடாமல் 2 வது நாளாக நேற்று இரவு 7:00 மணி வரை விசாரணை நீடித்தது. விசாரணையின் போது அவரை பார்க்க உறவினர்களை அனுமதிக்க வில்லை. அதிகாரிகளே காரில் ஓட்டல்களுக்கு சென்று தேவையானவற்றை வாங்கி வந்து கொடுத்தனர். மேலும் கேரள கொடுவிலார் சிட்டியில் சங்கரின் ஏலக்காய் கோடவுனின் பூட்டை உடைத்து அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அங்கு சில ஏலத் தோட்டங்களுக்கு சென்று விசாரித்துள்ளனர். கேரளா, கோம்பை, தேவாரம், கூடலூர் பகுதிகளுக்கு புதிதாக மேலும் 25 மேற்பட்ட கார்களில் அதிகாரிகள் தனித் தனியாக சென்று விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை