மேலும் செய்திகள்
முல்லைப் பெரியாற்றில் குளித்த கல்லுாரி மாணவர் பலி
4 hour(s) ago
பள்ளி கலை விழா துவக்கம்
4 hour(s) ago
குரங்குகளுக்கு உணவு வழங்குவதை தடுக்க வலியுறுத்தல்
4 hour(s) ago
தாயுமானவர் திட்டத்தில் கூடுதலாக 8558 பேர் சேர்ப்பு
4 hour(s) ago
ஆண்டிபட்டி:முழு அளவில் நிரம்பிய வைகை அணைக்கான நீர் வரத்து மழையால் அவ்வப்போது உயர்வதால் வைகை அணையில் வெள்ள அபாயம் தொடர்கிறது.வைகை அணைக்கு பெரியாறு, தேனி முல்லை ஆறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர்வரத்து கிடைக்கிறது. நவ., 9ல் நீர்மட்டம் 70.51 அடியாக உயர்ந்த நிலையில் அணைக்கு உபரியாக வந்த பல ஆயிரம் கன அடி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. நவ.,10ல் மதுரை, திண்டுக்கல் பாசனத்திற்கும், நவ.,23 முதல் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத்திற்கும் நீர் திறக்கப்பட்டதால் டிச.,8ல் நீர்மட்டம் 62.86 அடியாக குறைந்தது. நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் தொடர்ந்த மழையால் நீர்மட்டம் முழு அளவில் உயர்ந்து ஜன., 6 அதிகாலை 4:45 மணிக்கு 71 அடியானது. கடந்த நான்கு நாட்களாக அணைக்கு வரும் உபரி நீர் பெரிய, சிறிய மதகுகள் வழியாக தொடர்ந்து வெளியேறுகிறது.தேனி மாவட்டத்தில் மழைக்கான சூழலால் வெளியேறும் உபரி நீரின் அளவும் அவ்வப்போது உயர்கிறது. நேற்று காலை 6:00 மணிக்கு அணையில் இருந்து வெளியேறிய உபரி நீரின் அளவு வினாடிக்கு 1928 கன அடியாகவும், காலை 8:00 மணிக்கு வினாடிக்கு 2563 கன அடியாகவும் இருந்தது. காலை 10:0 மணிக்கு வினாடிக்கு 5148 கன அடியாக உயர்ந்து மதியம் 3:00 மணிக்கு வினாடிக்கு 3314 கன அடியாக குறைந்தது. அணையிலிருந்து எந்நேரத்திலும் கூடுதல் நீர் திறந்து விடப்படும் வாய்ப்புள்ளது.எச்சரிக்கை: வைகை அணையில் வெள்ள அபாயம் நீடிப்பதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோர கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க நீர் பாசனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago