உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாவட்டத்தில் தொடரும் மழை

மாவட்டத்தில் தொடரும் மழை

தேனி : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 2023 டிச.,31ல் நிறைவடைந்தது. ஆனாலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று காலை முதல் பல இடங்களில் சாரல் மழை காலை முதல் பெய்தது. மதியம் 12:00 மணியளவில் தேனி நகர் பகுதியில் மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று மாலை 6: 00 மணி வரை பதிவான மழை விவரங்கள் ஆண்டிப்பட்டி 21 மி.மீ., அரண்மனைப்புதுார் 3.4 மி.மீ., போடி 4.6 மி.மீ., கூடலுார் 8.4மி.மீ., மஞ்சளாறு 12 மி.மீ., பெரியகுளம் 21 மி.மீ., சோத்துப்பாறை 15 மி.மீ., உத்தமபாளையம் 5.6 மி.மீ., வைகை அணை 7.2 மி.மீ., வீரபாண்டி 5 மி.மீ., சண்முகாநதி அணை 8.4 மி.மீ., என மொத்தம் 111.6 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை