உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கால்வாயில் குவிந்த குப்பையால் கண்மாய்க்கு நீர் செல்வதில் சிரமம்

கால்வாயில் குவிந்த குப்பையால் கண்மாய்க்கு நீர் செல்வதில் சிரமம்

ஆண்டிபட்டி : மூல வைகை ஆற்றில் துரைச்சாமிபுரம் அருகே அமைக்கப்பட்ட தடுப்பணையிலிருந்து வரும் நீர் வரத்து கால்வாயில் சேர்ந்துள்ள குப்பையை அகற்ற நீர்ப்பாசன துறை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். துரைசாமிபுரம் தடுப்பணையிலிருந்து வரும் கால்வாய் நீர் மரிக்குண்டு, பாலசமுத்திரம், ரங்கசமுத்திரம் கண்மாய்களில் தேங்குகிறது. ஒவ்வொரு கண்மாய்க்கும் இரு நாட்கள் வீதம் முறை வைத்து தண்ணீர் பிரித்து வழங்கப்படுகிறது. நீர் வரத்து கால்வாய் பராமரிப்பின்றி பல இடங்களில் புதர் மண்டியுள்ளது. விவசாய கழிவுகள், அப்புறப்படுத்தப்பட்ட செடி கொடிகளை கால்வாயில் கொட்டுகின்றனர். கால்வாய் நீரில் அடித்து வரப்படும் குப்பை இவற்றுடன் சேர்ந்து பல இடங்களில் அடைப்பு ஏற்படுத்துகிறது. இதனால் கண்மாய்க்குச் செல்லும் தண்ணீரின் வேகம் தடைபடுகிறது. குப்பையால் நீர் வரத்து தடைபடும் இடங்களை கண்டறிந்து, குப்பையை அகற்ற நீர் பாசன துறையினர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை