உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம்

தேனியில் 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம்

தேனி: வைகை அணையில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குழாய் பழுது ஏற்பட்டுள்ளதால் தேனி நகராட்சிபகுதிகளில் இன்று, நாளை (ஜன.,3,4) குடிநீர் சப்ளை நிறுத்தப்படுவதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.தேனி அல்லிநகரம் நகராட்சியில் வீடுகள், வணிக வளாகங்கள் என 15,194 குடிநீர் இணைப்புகள் உள்ளன. இவற்றிற்கு தினமும் 14.50 லட்சம் லிட்டர் குடிநீர் குடிநீர் வழங்கப்படுகிறது. நகராட்சி குடிநீர் ஆதாரமாக வைகை அணை, முல்லைப்பெரியாறு உள்ளன. பழனிசெட்டிபட்டி, வைகை அணையில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் நீர் சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. வைகை அணையில் இருந்து வரும் நீர் என்.ஆர்.டி., நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேமிக்கப்படுகிறது.பின் அங்கிருந்து மற்ற பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு அனுப்பப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.வைகை அணை நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு இன்று, நாளை (ஜன.,3,4) குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக கமிஷனர் ஜஹாங்கிர் பாஷா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ