உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குண்டேரி - பனங்கோடை பாதை ஆக்கிரமிப்பு

குண்டேரி - பனங்கோடை பாதை ஆக்கிரமிப்பு

போடி: போடி ஒன்றியம், அகமலை ஊராட்சிக்கு உட்பட்டவை குண்டேரி -பனங்கோடை மலைக்கிராமம். இப்பகுதியில் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். காபி. பலா, ஆரஞ்சு, எலுமிச்சை உள்ளிட்ட பணப்பயிர்கள் பயிரிட்டுள்ளனர். மண் ரோட்டில் விவசாயிகள் நடந்து சென்று வந்தனர். தற்போது இப்பாதையின் இருபுறமும் முட்புதர்களின் ஆக்கிரமிப்பாக மாறி உள்ளன. இதனால் விவசாயிகள் தோட்டங்களுக்கு நடந்து செல்லவும், விளை பொருட்கள் கொண்டு வர முடியாமலும் சிரமம் அடைந்து வருகின்றனர். குண்டேரி - பனங்கோடை செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை