மேலும் செய்திகள்
கேரளாவில் விஷவாயு தாக்கி தமிழக தொழிலாளர்கள் பலி
03-Oct-2025
போலீஸ் செய்திகள்.....
03-Oct-2025
நாளை( அக்.,4) மின்தடை
03-Oct-2025
ரத்ததான முகாம்
03-Oct-2025
விதிமீறிய 39 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
02-Oct-2025
கம்பம்: மாவட்டத்தில் வறண்ட வானிலை, பனிப்பொழிவு இருப்பதால் திராட்சையில் செவட்டை நோய் தாக்க வாய்ப்புள்ளது அதை கட்டுப்படுத்த திராட்சை ஆராய்ச்சி நிலையம் பரிந்துரைகளை அறிவித்துள்ளது.கம்பம் பள்ளத்தாக்கில் கம்பம், காமயகவுண்டன்பட்டி, சுருளிப் பட்டி, அணைப் பட்டி, ஓடைப்பட்டி, வெள்ளையம்மாள்புரம், அப்பி பட்டி , கன்னிசேர்வை பட்டி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிராமங்களில் திராட்சை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இங்கு ஆண்டிற்கு 3 அறுவடை என்பதால் ஆண்டு முழுவதும் திராட்சை கிடைக்கும் பகுதி என்ற பெயர் பெற்றுள்ளது.இந்தாண்டு வடகிழக்கு பருவமழை ஜன. 15 வரை தொடர்ந்ததாலும், தற்போது வறண்ட வானிலை, பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. இதனால் திராட்சையில் செவட்டை தாக்க வாய்ப்புள்ளது. செவட்டை நோயை கட்டுப்படுத்த ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலைய தலைவர் சுப்பையா தெரிவித்துள்ள தொழில்நுட்ப பரிந்துரையில், விவசாயிகள் மெத்திலோ பாக்டீரியா ஒரு மில்லி, சிலிகான் ஒரு கிராம், ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து திராட்சை கொடிகளில் தெளிக்க வேண்டும். இதன் மூலம் செவட்டையை கட்டுப்படுத்தலாம். மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு திராட்சை ஆராய்ச்சி நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
03-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025
02-Oct-2025