| ADDED : ஜன 12, 2024 06:38 AM
தேனி : அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோருக்கு பொங்கல் தொகுப்பில் வழங்க வேண்டிய ரூ.ஆயிரம் வழங்காமல் ரேஷன்கடை பணியாளர்கள் அழைக்கழிப்பு செய்வதாக புகார் எழுந்துள்ளது.மாவட்டத்தில் 526 ரேஷன் கடைகள் மூலம் 4.26 லட்சம் அரிசிபெறும் ரேஷன் கார்டுதார்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சீனி, முழு கரும்பு, பணம் ரூ. ஆயிரம் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இத் திட்டத்தில் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு பொங்கல் தொகுப்பு கிடையாது என அறிவிக்கப்பட்டாலும் பின்னர் அரிசி பெறும் ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பொங்கல் தொகுப்பு நேற்று முன்தினம் முதல் வினியோகிக்கப்பட்டு வருகிறது.ஆனால் முதலில் அறிவிக்கப்பட்ட ரேஷன் கார்டு தாரர்களுக்கு மட்டும் அதாவது டோக்கன் கொண்டு வருபவர்களுக்கு மட்டும் பொங்கல் தொகுப்புடன் ரூ.ஆயிரம் வழங்கப்படுகிறது. டோக்கன் இன்றி வருபவர்களுக்கு தொகுப்பில் உள்ள பிற பொருட்கள் வழங்கப்பட்டாலும் பணம் ரூ.ஆயிரம் வழங்காமல் ரேஷன் கடைபணியாளர்கள் திருப்பி அனுப்புகின்றனர். அவர்களிடம் உங்கள் பட்டியல் வரவில்லை, நாளை வாருங்குள், அடுத்த நாள் வாருங்கள் என அலைக்கழிப்பு செய்கின்றனர். இந்த அலைக்கழிப்பு பெரியகுளம் பகுதி ரேஷன் கடைகளில் அதிகம் காணப்படுகிறது.கடை பணியாளர்களை கேட்டால் கூட்டுறவுத்துறையில் இருந்து பணம் வழங்குவதற்காகன உத்தரவு வரவில்லை என்கின்றனர். அரசு ஊழியர் குடும்பத்தினருக்கு பொங்கல் தொகுப்பு அனைத்தும் அலைக்கழிக்காமல் வழங்க வேண்டும் வலியுறுத்தி உள்ளனர்.