உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தென்னையில் வெள்ளைபூச்சி தாக்குதல் காய் பிடிப்பு குறைந்து மகசூல் பாதிக்கும் நோய் தடுப்பு மருந்து இலவசமாக வழங்க வலியுறுத்தல்

தென்னையில் வெள்ளைபூச்சி தாக்குதல் காய் பிடிப்பு குறைந்து மகசூல் பாதிக்கும் நோய் தடுப்பு மருந்து இலவசமாக வழங்க வலியுறுத்தல்

கம்பம்: மாவட்டத்தில் 22 ஆயிரம் எக்டேரில் சாகுபடி செய்துள்ள தென்னையில் வெள்ளைப்பூச்சி தாக்குதல் காணப்படுகிறது.தேனி தோட்டக்கலை மாவட்டமாகும். இதில் தென்னை சாகுபடி முதலிடத்தில் உள்ளது. மாவட்டத்தின் பரவலாக 22 ஆயிரம் எக்டேரில் தென்னை சாகுபடி நடைபெறுகிறது. 40 நாட்களுக்கு ஒரு முறை காய் பறிப்பு, பராமரிப்பு செலவுகள் குறைவு, தண்ணீர் தேவை அதிகம் இருக்காது போன்றவற்றால் பெரும்பாலான விவசாயிகள் தென்னை சாகுபடியை தேர்வு செய்கின்றனர்.ஆனால் மற்ற பயிர்களை போல் இன்றி தென்னையில் திடீரென நோய் தாக்கி பாதிப்பிற்குள்ளாகும். 15 ஆண்டுகளுக்கு முன்பு கேரள வாடல் நோய் தாக்கிய போது, ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி தீ வைத்தனர். காரணம் அதை கட்டுப்படுத்த மருந்தே இல்லை என கொச்சி தென்னை வளர்ச்சி வாரியம் கூறி வெட்டும் ஒவ்வொரு மரத்திற்கும் தலா ரூ.250 இழப்பீடு வழங்கியது., அதன் பின் தென்னை வேர் அழுகல் நோய் பாதிப்பு காணப்பட்டது. இந்த நோயை கட்டுப்படுத்த தமிழக வேளாண் அதிகாரிகள் குழு அப்போது, கேரளாவில் காயங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம் சென்று பயிற்சி பெற்று வந்து, விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கியது. இப்போது அதே போன்ற வெள்ளை பூச்சி தாக்குதல் தென்னையில் பரவலாக காணப்படுகிறது. தென்னை விவசாயிகள் கூறுகையில், தென்னையில் வெள்ளை பூச்சி தாக்குதல் உள்ளது. இலையில் உள்ள பச்சையத்தை உறிஞ்சி குடித்து விடுகிறது. இதனால் காய் பிடிப்பு குறைகிறது. காய்களும் சிறுத்து விடுகிறது. பூச்சி மருந்து தெளித்தாலும் பறந்து விட்டு சில நாட்களில் மீண்டும் மரத்தில் தாக்குகிறது. இதை அழிக்க பூச்சிகொல்லி மருந்தை வேரில் கட்டி வருகிறோம். காய் பறித்த பின் இதை செய்கிறோம்.இருந்த போதும் மதுரை வேளாண் கல்லூரியின் இதை தடுக்க நச்சுயிரி ஒன்று கண்டுபிடித்து சோதனை ஒட்டத்தில் இருப்பதாக கூறுகின்றனர். இம் மருந்தினை விவசாயிகளுக்கு முழுவதும் இலவசமாக அதை தர அரசு உத்தரவிட வேண்டும்,' என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை