உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மொச்சைக்காய் சீசன் துவக்கம்

 மொச்சைக்காய் சீசன் துவக்கம்

கடமலைக்குண்டு: -: வருஷநாடு பகுதியில் மொச்சைக்காய் சீசன் துவங்கிய நிலையில் காய்களுக்கு விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடமலைக்குண்டு, தங்கம்மாள்புரம், மயிலாடும்பாறை, வருஷநாடு, தும்மக்குண்டு, முறுக்கோடை, வாலிப்பாறை, குமணன்தொழு, கோம்பைத் தொழு, அரசரடி, முத்தாலம்பாறை உட்பட பல மலைக்கிராமங்களில் மொச்சைக்காய் சாகுபடி உள்ளது. கடந்த இரு மாதத்திற்கு முன் விதைப்பு செய்யப்பட்ட செடிகளில் தற்போது பலன் தருகிறது. விவசாயிகள் கூறியதாவது: இந்தாண்டு மொச்சைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் கிலோ ரூ.40 ஆக இருந்த மொச்சைக்காய் தற்போது கிலோ ரூ.80 வரை விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வு மொச்சைக்காய் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்துவதாக உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை