உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  குழந்தையுடன் தாய் மாயம்

 குழந்தையுடன் தாய் மாயம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே டி.சுப்பலாபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள் 48, இவரது 3வது மகள் தேவி 23, என்பவரை திண்டுக்கல் மாவட்டம், அணைப்பட்டியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன் கணவருடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு குழந்தையுடன் வந்திருந்த தேவி நேற்று முன்தினம் கடைக்கு சென்று வருவதாக கூறி குழந்தையுடன் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. பாண்டியம்மாள் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை