| ADDED : ஜன 17, 2024 01:07 AM
தேனி : பூதிப்புரத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மாடு முட்டி அதே பகுதியை சேர்ந்த முருகவேல் 53, காயமடைந்தார். போதையில் இருந்த வாலிபர்கள் சிலர் போலீசாருடன் தள்ளு முள்ளுவில் ஈடுபட்டாதால் போலீசார் விசாரிக்கின்றனர்.நேற்று மாலை மாடுகளை அலங்கரித்து வீதிகளில் அழைத்து வந்தனர். அதனை வேடிக்கை பார்பதற்காக ஆதிப்பட்டி, வாழையாத்துப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பூதிப்புரத்தில் கூடியிருந்தனர். பூதிப்புரம் வரதராஜ பெருமாள் கோயில் அருகில் மாடுகளை அவிழ்து விட்டனர். அப்போது அங்கு வேடிக்கை பார்க்க நின்றிருந்த முருகவேல் என்பவரை மாடு முட்டியதில் காயம் ஏற்பட்டது. அவர் தேனி மருத்துவக்கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டார். மற்றொருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.வேடிக்கை பார்க்க வந்த போதை வாலிபர்கள் அவர்களுக்குள் தகராறில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை விலக்கினர். அப்போது போலீசாருக்கும் இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதில் போலீஸ்காரர் ஒருவர் கீழே விழுந்தார். இதைதொடர்ந்து அந்த வாலிபர்கள் தப்பி சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக மதுவிலக்கு டி.எஸ்.பி., ரவிசக்கரவர்த்தி தலைமையில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.